செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சவுதி அரேபியா மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்சவுதி அரேபியா மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்

சவுதி அரேபியா மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்சவுதி அரேபியா மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்

1 minutes read

சவுதி அரேபிய நாட்டின் மன்னர் மற்றும் அரசு குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

அதிலும் இப்போதைய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் எல்லோரையும் மிஞ்சும் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொள்கிறார். அவர் தற்போது இந்தோனேசியா, மலேசியா, சீனா, மாலத்தீவு, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலாவதாக 9 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அவர் இந்தோனேசியா வந்தார். அதிநவீன சொகுசு விமானத்தில் அவர் தலைநகரம் ஜகர்தா வந்து இறங்கினார். மன்னர் சுற்றுப்பயணத்துக்காக ஏராளமான ஆடம்பர பொருட்கள் சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அவர் பயணம் செய்வதற்காக அவருடனேயே 2 மெர்சிடஸ் பென்ஸ் விலை உயர்ந்த கார்கள் வந்து இறங்கின. மேலும் 2 தானியங்கி லிப்டுகளும் கொண்டு வரப்பட்டன. இத்துடன் ஏராளமான அதிநவீன கருவிகளும் வந்து இறங்கின. மன்னருக்காக மட்டும் 459 டன் பொருட்கள் சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

மன்னருடன் 36 இளவரசர்கள் மற்றும் இளவரசிகள், 10 மந்திரிகள், 800 பிரதிநிதிகள் வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், மன்னருக்கும், மன்னரின் குடும்பத்தினருக்கும் பணிவிடைகள் செய்வதற்காக 572 பணியாட்கள் வந்துள்ளனர். பிரதிநிதிகள், பணியாட்கள் என அனைவரையும் சேர்த்த மொத்தம் 1,500 பேர் மன்னருடன் இந்தோனேசியா வந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.