செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கோர விபத்து பஸ்-லாரி மோதல் | சீனாகோர விபத்து பஸ்-லாரி மோதல் | சீனா

கோர விபத்து பஸ்-லாரி மோதல் | சீனாகோர விபத்து பஸ்-லாரி மோதல் | சீனா

0 minutes read

சீனாவின் தென்மேற்கு பகுதியில் யுனான் மாகாணம் உள்ளது. அங்கு கெங்மா நகரில் இருந்து மாகாண தலைநகரான குன்மிங் நகருக்கு 47 பயணிகளுடன் ஒரு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ், லான்காங் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி அந்த பஸ்சுடன் பயங்கரமாக மோதியது. இதில் பஸ் உருக்குலைந்து போனது. பயணிகள் அலறித்துடித்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இந்த விபத்து, அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.