உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. உயர் பாதுகாப்பு நிறைந்த இந்த அலுவலகத்தைக் குறிவைத்து இன்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் தூதரகம் சேதம் அடைந்ததாகவோ, உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தூதரக வளாகத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.