எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2016ல், பத்து லட்சமாக குறைந்துள்ளது. மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கும், எச்.ஐ.வி., எனப்படும்,
ஆட்கொல்லி நோய் கிருமி பாதிப்பான, எய்ட்ஸ் கடந்த, 1980களில் கண்டறியப்பட்டது.
இந்த பாதிப்பால், உலகம் முழுவதும், இதுவரை, 3.5 கோடி பேர் உயிரிழந்துள்ளனர்;
தற்போது இந்த நோய் கிருமிகள் பரவும் வேகம் கட்டுப்பட்டுள்ளதாக, ஐ.நா., அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா., எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் நிர்வாகி, மைக்கேல் சித்பே
கூறியதாவது: எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அதன் பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. எய்ட்ஸ் பாதிப்பால், 2015ல், 19 லட்சம் பேர் பலியாகி இருந்தனர்; 2016ல், இது, 10 லட்சமாக குறைந்துள்ளது. எய்ட்ஸ்பாதிப்புக்கு மருந்து இல்லை என்ற போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்குரிய சிகிச்சைகள் உள்ளன. ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் பேர், எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
0