செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இராணுவத்தால் முற்றுகை | மாலைதீவு பாராளுமன்றம்

இராணுவத்தால் முற்றுகை | மாலைதீவு பாராளுமன்றம்

0 minutes read
அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யமீனின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸீஹ் இற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தால் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டதோடு, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அப்துல்லா யமீனின் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்த நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கையின்போது, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகு கலவை விசிறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.