தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் ஜியூன்-ஹை 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக கடந்த 2013ஆம் ஆண்டில் பதவியேற்றவர் பார்க் ஜியூன்-ஹை. சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக அரசின் கொள்கைகளை வளைத்ததாகவும் இதற்காக பெருந்தொகை லஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து பார்க் ஜியூன்-ஹை-க்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து பார்க் ஜியூன்-ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பார்க் ஜியூன்-ஹை-க்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
