செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புத்தர் சிலையால் வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.

புத்தர் சிலையால் வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.

0 minutes read

சிங்கள மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையைத் தோற்றுவிப்பதன் ஊடாக, வவுனியா வளாக கற்கைகளை மீள ஆரம்பிக்கும் நோக்குடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ சிங்கள மாணவர்கள் முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.

நிர்வாகத்திடம் எந்தவொரு அனுமதியையும் பெறாது சிங்கள மாணவர்கள் தன்னிச்சையாக புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதால், வளாக நிர்வாகம் அதற்கு தடை விதித்தது.

அதனால் சிங்கள மாணவர்கள் பெரும் நெருக்குதல்களை வளாக நிர்வாகத்துக்கு ஏற்படுத்தினர். இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் பேச்சு நடத்தி சுமூக நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குழு அங்கு புறப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.