0
புதிய அரசியல் மாற்றம் குறித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியாக்கிய பிரதமரை புறந்தள்ளிய மைத்திரியின் அரசியல் நாகரிகம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த செயற்பாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டுவர ரணிலும், ஐக்கிய தேசியக் கட்சியும் அதிக பாடுபட்டுள்ளனர். ஆனால் தற்போது ஜனாதிபதியின் அரசியல் நாகரிகம் குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், கட்சியில் மேலிடத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும்அறிவித்துள்ளார்.