செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதற்கட்ட நிவாரணங்கள் சிலவற்றை நாளை வர்த்தமானியில் அறிவிப்பேன் – மஹிந்த ராஜபக்ஸ

முதற்கட்ட நிவாரணங்கள் சிலவற்றை நாளை வர்த்தமானியில் அறிவிப்பேன் – மஹிந்த ராஜபக்ஸ

1 minutes read
மக்களுக்கு வழங்கப்படவுள்ள சில நிவாரணங்களை நாளை வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சந்தித்த போதே  மஹிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அனைத்து விடயங்களும் சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ளன. ஒரு விடயம் கூட சட்டத்திற்கு முரணாக இடம்பெறவில்லை என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூற வேண்டும். இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயார் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் அல்லது வேறொன்றின் ஊடகத் தாம் தோற்கடிக்கப்பட்டால், அதுவே தேர்தலுக்கு செல்லக்கூடிய மிகவும் இலகுவான வழிமுறை என அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சி விருப்பத்துடன் அதனை செய்தால் நானும் விருப்பத்துடன் ஒத்துழைப்பு வழங்குவேன். ஏனெனில், எனக்கும் தேர்தலே தேவைப்படுகிறது. ஆகவே இந்த இரண்டிற்கும் தயாராகவே இருக்கின்றோம்.
நான் நேற்று எனது கொள்கை தொடர்பில் சிறு விளக்கமளித்தேன். நான் உரையாற்றி வெளியேறிய போது முச்சக்கரவண்டி சங்கங்கள் 5 ரூபாவைக் குறைத்தன. முறையற்ற விதத்தில் வரி அறவிடப்படுகின்றது. இதை நான் அன்றும் கூறினேன். முதற்கட்ட  நிவாரணங்கள் சிலவற்றை நாளை நான் வர்த்தமானியில் அறிவிப்பேன் எனத்தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More