செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மஹிந்த சார்பில் ரணிலை சந்தித்த கோட்டாபய

மஹிந்த சார்பில் ரணிலை சந்தித்த கோட்டாபய

1 minutes read

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இடையே நேற்று மாலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் பிரதிநிதியாக கோட்டாபய சென்றிருந்ததாக கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எவ்வித வெளிநபர்களின் பங்கேற்பும் இன்றி பகிரங்கமற்ற கலந்துரையாடலாக, மாலை 4.10 இல் இருந்து 4.17 வரை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றது.

பாராளுமன்றத்திற்குள் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெற்றிகொண்டுள்ளதாக, ரணில் விக்ரமசிங்கவிடம் கோட்டாபய இதன்போது கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு, பாராளுமன்றத்தின் நம்பிக்கையை உறுதி செய்யத் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலின் போது பரிமாற்றப்பட்ட கருத்துக்களை வரவேற்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்குள் வன்முறையைத் தவிர்ப்பதற்கு அவர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்ததாக ரணிலின் பிரிவினர் குறிப்பிட்டனர்.

இந்தப்பிரச்சினை பாராளுமன்றத்துக்குள் தீர்க்கப்பட வேண்டியவொன்று என ரணில் கோட்டாபயவிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மக்களின் ஆதரவு காணப்படுகின்றது என்பதை உறுதி செய்ய பாராளுமன்றத்திற்கு வெளியே மக்களிடம் செல்வதற்கு தயார் எனவும் ரணில் இதன்போது கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More