2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின்படி ஈரான் மீதான சர்வதேச தடைகளைத் தளர்த்தியிருந்த நிலையில், தற்போது அணுகுண்டு தயாரிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் நிறுத்தவில்லை என டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதோடு, ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் மற்றும் பயங்கரவாதத்திற்கு அது ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்து குறித்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலக்கியத்தைத் தொடர்ந்தே இந்த தடை உத்தரவினை டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.
அமெரிக்க டொலர் கொள்வனவில் கட்டுப்பாடு, தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோக வர்த்தகம் மற்றும் வாகனத்துறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் ஈரானுக்கு கட்டுப்பாடு போன்ற தடைகளை கடந்த மே மாதம் அமெரிக்கா ஈரானின் மீது முதற்கட்டமாக விதித்தது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தடையுத்தரவாக, ஈரானின் எண்ணெய் மற்றும் கப்பல்துறை, அதன் மத்தியவங்கி உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்தும் வகையில் இந்தத் தடைகள் அமைந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.