செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

1 minutes read

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் தங்களுக்கு பிடித்த உணவுகளை மட்டும் உண்ணாமல்., இதனுடன் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து., உங்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சமயத்தில்., உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்., சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் கலோரிகளை விட அதிகளவு கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கான உணவுப்பட்டியல் குறித்து இனி நாம் காண்போம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மூன்று வேலை சாப்பாட்டிற்கு பதில் ஆறு வேலை உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த சமயத்தில்., சைவ வகை உணவுகளை பொறுத்த வரையில் தானிய வகை உணவுகள்., பருப்பு வகை உணவுகள்., காய்கறிகள் மற்றும் பழங்கள்., கீரை வகை உணவுகள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இதுமட்டுமல்லாது பால்., தயிர்., வெண்ணெய்., நெய்., மோர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

தினமும் தேவையான அளவு முந்திரி., காய்ந்த திராட்சை., வேர்க்கடலை., நெல்லிக்காய் மற்றும் அத்திப்பழம் போன்ற உளர் பழ வகைகளை சாப்பிட வேண்டும். இந்த சமயத்தில் அசைவ வகை உணவுகளை பொறுத்த வரையில் முட்டை., மீன்., ஆடு மற்றும் கோழி., ஆட்டு ஈரல் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் கொண்ட உணவை சாப்பிட வேண்டும்.

குழந்தையின் இரும்பு சத்திற்கு தேவையான முருங்கை கீரை., பேரிச்சை பழம்., தர்பூசணி மற்றும் உளர் திராட்சை., காய்ந்த சுண்டைக்காய்., வெல்லம்., பனங்கற்கண்டு., பாதாம் பருப்பு., ஆட்டு ஈரல் போன்றவற்றை அடிக்கடி கட்டாயம் சாப்பிட வேண்டும். இந்த சமயத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும். கர்ப்ப காலத்தில் போதுமான அளவு நீர் குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் தொற்றில் இருந்து தப்பிக்க உதவும்.

 

நன்றி : நெற்றிக்கண்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.