செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்மூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்

மூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்மூன்றாவது முறையாகவும் விஷாலுடன் லட்சுமி மேனன்

1 minutes read

பாண்டிய நாடு மதுரை மண்வாசைன கதை என்பதால், கிராமத்துப் பெண்ணாக நடிக்க கனகச்சிதமாக இருப்பார் என்று லட்சுமி மேனனை விஷாலுக்கு ஜோடியாக்கினார் சுசீந்திரன். அப்படம் மெகா ஹிட்டாகி விட்டதால், இப்போது லட்சுமி மேனனை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட விஷால் தான் தயாரித்து நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். இன்னொரு நாயகியாக இனியாவும் இருந்தாலும் கதையின் மையம் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தை சுற்றித்தான் நகர்கிறதாம்.

இந்நிலையில் அடுத்து சிங்கம் இயக்குனர் ஹரி இயக்கும் படத்திலும் விஷால் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கம் – 2 வுக்குப்பிறகு சூர்யா தம்பி கார்த்தியை வைத்துத்தான் படம் இயக்க திட்டமிட்டிருந்தார் ஹரி. ஆனால் இப்போது கார்த்தி நடிக்கிற படமெல்லாம் சறுக்கிக் கொண்டு வருவதால், அந்த சறுக்கலில் நாமும் சிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ விஷாலை புக் பண்ணியிருக்கிறார்.

ஏற்கனவே அவர்கள் இணைந்த தாமிரபரணி படம் வெற்றி பெற்றதால் பழைய செண்டிமென்டினைக் கருத்தில் கொண்டு விஷாலை நடிக்க வைக்கும் ஹரி, அந்த கிராமத்து கதைக்கு லட்சமிமேனனே சூட்டாக இருப்பார் என்று அவரையே நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம். இது குறித்து அவரை தொடர்பு கொண்டபோது மறுபடியும் விஷாலுடன் டூயட்டா என்று சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டாராம் லட்சுமி மேனன்.

அதோடு எப்போது எத்தனை நாள் கால்சீட் என்றாலும் அள்ளித்தர தயாராக இருக்கிறேன் என சந்தோச களிப்போடு உறுதியளித்துள்ளாராம் நடிகை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.