மங்காத்தா அஜித் பாணியில் கார்த்திக்!மங்காத்தா அஜித் பாணியில் கார்த்திக்!

‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் ஏ.ஜி.எஸ். நிறுவனம் மீண்டும் கைகோர்த்துள்ள படம் அநேகன்.

இந்தப் படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார். தனுஷ் ஜோடியாக இந்தி நடிகை அமிரா தஸ்தூர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஷ் தோற்றத்துடனும் வருகிறார்.

தனுஷ் இப்படி என்றால் நடிகர் கார்த்திக், ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களில் அஜித் வருவது மாதிரியான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறாராம். இந்த படத்தில் வில்லனாக 80களின் காதல் நாயகன் நடிகர் கார்த்திக் நடிக்கிறாராம். இவருக்கு தனுஷுக்கு இணையான வித்தியாச வேடம் தரப்பட்டுள்ளதாம்.

கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு அநேகன் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்