அப்பா கமல்ஹாசனின் பெயரையோ அல்லது அவரது சிபாரிசையோ பயன்படுத்தாமல் சினிமாவில் ஜெயித்துக் காட்ட ஆசைப்படுகிறாராம் அக்ஷரா ஹாசன். ‘சினிமாவில் நுழைய வேண்டுமானால் என் அப்பா கமல் பெயரும், அம்மா சரிகா பெயரும் எனக்கு விசிட்டிங் கார்டாக இருக்கலாம்.
ஆனால், சொந்தத் திறமை இருந்தால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும். இதுவரை அவர்களிடமும் சரி, அக்கா ஸ்ருதி ஹாசனிடமும் சரி, எனக்கு பட வாய்ப்பு சொல்லுங்கள் என்று நான் கேட்டதில்லை. அக்ஷராவாக மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறேன்’ என்கிறார். தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.