செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் சிறந்த படமாக தேர்வு

பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் சிறந்த படமாக தேர்வு

0 minutes read

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவரும் சர்வதேச ஜூனியர் திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ’மேரி கோம்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் நடுவர்களாக இருந்து ’மேரி கோம்’ படத்துக்கு வெண்கல குதிரையை பரிசாக வழங்கினர்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையின் வெற்றி சரித்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. அது மட்டுமின்றி, கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாலும் திரையிடப்பட்ட ‘மேரி கோம்’ சர்வதேச சினிமா விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது நினைவிருக்கலாம்.

அடுத்த மாதம் ஸ்வீடனில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவிலும் இப்படத்தை திரையிட உள்ளதாக ’மேரி கோம்’ படத்தின் இயக்குனர் ஓமங்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.