செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணி இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன் | சூர்யாபெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணி இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன் | சூர்யா

பெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணி இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன் | சூர்யாபெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணி இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன் | சூர்யா

1 minutes read

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது.

இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. இதனால் ஜோதிகா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:– பெண்கள் முன்னேற்றத்தை விரும்பும் ரசிகர்கள் ‘36 வயதினிலே’ படத்துக்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. அவர்களின் பேராதரவோடு இந்த படம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பெருமையளிப்பதாக உள்ளது.

ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தை ரசித்து இருக்கிறீர்கள். பெண்கள் வெற்றியை போற்றக்கூடியவராகவும் இருக்கிறீர்கள். எனவே தான் படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. சமுதாயத்தில் இனி நிறைய வசந்திகள் தங்கள் லட்சியங்களை வென்றெடுக்க தயாராவார்கள்.

இல்லத்தரசிகளாக பணிகள் செய்யும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதையே தான் இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More