ஹாலிவுட்டின் புதிய, ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் ஹீரோவாக, டாம் ஹாலண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை, சோனி பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ‘தி இம்பாசிபிள்’ படம் மூலம் புகழ் பெற்ற, டாம் ஹாலண்டு, பலத்த போட்டிக்கு இடையே, சிலந்தி மனிதனாக நடிக்கத் தேர்வாகிஉள்ளார். இப்படத்தை, ஜான் வாட்ஸ் இயக்குகிறார்.
தற்போது தயாராகி வரும், ‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ திரைப்படத்திலும், டாம் ஹாலண்டு, சிலந்தி மனிதனாக, சிறிய பாத்திரத்தில் தோன்ற உள்ளார். இப்படம், 2016, மே, 6ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, டாம் ஹாலண்டு நடிக்கும், ‘ஸ்பைடர் மேன்’ 2017, ஜூலை, 28ல் வெளியாக உள்ளது. இதுவரை, சிலந்தி மனிதன் வரிசையில், ஐந்து படங்கள் வெளிவந்து
உள்ளன. இதில், டாபி மக்யூர் மூன்றிலும், ஆண்ட்ரூ கார்பீல்டு இரண்டிலும் நடித்துள்ளனர்.
ஆண்ட்ரூ நடித்து, கடைசியாக வெளிவந்த, ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் – 2’ பட வசூல் குறைந்தது. இதனால், டாம் ஹாலண்டுக்கு சிலந்தி மனிதனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
0