செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா உயர்நீதிமன்றம் சிம்புவின் “வாலு” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம் சிம்புவின் “வாலு” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது

உயர்நீதிமன்றம் சிம்புவின் “வாலு” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம் சிம்புவின் “வாலு” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது

1 minutes read

நடிகர் சிம்பு நடித்த வாலு திரைப்படத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த வாலு திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ஐசி ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, அப்படத்தின், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நான்கு மாநில வெளியீட்டு உரிமையை மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்து விற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதை மீறி தற்போது வேறு நபர் மூலமாக அப்படத்தை வெளியிட முயல்வதாக மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. எனவே தன்னை தவிர வேறு நபர் மூலமாக வாலு படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வரும் 13-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம் அதுவரை திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிம்பு நடித்து வரும் ஒவ்வொரு படமும் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. இது சிம்புவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.