ராஜமௌலி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘பாகுபலி’. இதில் இதில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்துள்ளனர். ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் ராஜமௌலிக்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வாழ்த்து மழையில் நனைந்து வரும் ராஜமவுலி, தன்னை வாழ்த்திய நெஞ்சங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் இருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து வருகிறார்.
பாகுபலி படம் ரிலீசான ஐந்து நாட்களில் ரூ.215 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.