செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “காக்கா முட்டை”, “குற்றம் கடிதல்” படங்கள் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்பபடவுள்ளது“காக்கா முட்டை”, “குற்றம் கடிதல்” படங்கள் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்பபடவுள்ளது

“காக்கா முட்டை”, “குற்றம் கடிதல்” படங்கள் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்பபடவுள்ளது“காக்கா முட்டை”, “குற்றம் கடிதல்” படங்கள் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்பபடவுள்ளது

1 minutes read

படம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது பெற்ற படங்கள் ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’. இதில் காக்கா முட்டை படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தேசிய விருதை தவிர பல விருதுகளை வாங்கியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு படங்களும் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தைவான் திரைப்படவிழாவின் தூதர் சங் குவாங் டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘தைவான் அரசு சிறந்த படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளை வழங்கி கவுரப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழில் ‘குற்றம் கடிதல்’, ‘காக்கா முட்டை’ படங்களை தேர்வு செய்திருக்கிறோம். மேலும் பிற மொழிகளில் வெளியான சிறந்த படங்களையும் தேர்வு செய்திருக்கிறோம். தைவானில் படப்பிடிப்பு நடத்த தைவான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது’’ என்றார்.

தைவானில் தமிழ் படங்கள் ஒளிபரப்பப்படுவது, தமிழில் சினிமாவின் பெருமையாக கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.