செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சூப்பர் ஹிட்டான படம் ‘கேளடி கண்மணி’ ரீமேக் | இயக்குனர் வசந்த்சூப்பர் ஹிட்டான படம் ‘கேளடி கண்மணி’ ரீமேக் | இயக்குனர் வசந்த்

சூப்பர் ஹிட்டான படம் ‘கேளடி கண்மணி’ ரீமேக் | இயக்குனர் வசந்த்சூப்பர் ஹிட்டான படம் ‘கேளடி கண்மணி’ ரீமேக் | இயக்குனர் வசந்த்

1 minutes read

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கேளடி கண்மணி’. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கதாநாயகனாகவும், ராதிகா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். 90களில் அன்றைய இளம் கதாநாயகர்களை வைத்து படமாக்காமல் நடுத்தர வயதினரை வைத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்திருந்தார் வசந்த்.

தற்போது இப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் இயக்குனர் வசந்த். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ‘பழைய படங்களை தற்போது ரீமேக் செய்யும் காலம் வந்துவிட்டது. அப்படி நான் ரீமேக் செய்ய நினைத்தால் ‘கேளடி கண்மணி’ படத்தை ரீமேக் செய்வேன். ஆனால் இந்த படத்தில் சீனியர் நடிகர்களை வைத்து இயக்க மாட்டேன். இன்றைய கால கட்டத்தில் உள்ள இளம் ஜோடிகளை தேர்வு செய்து நடிக்க வைப்பேன். மேலும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து புதிய பரிமாணத்தில் இயக்குவேன்’ என்றார்.

தற்போது இயக்குனர் வசந்த் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படம் வெளியான பிறகு ‘கேளடி கண்மணி’ படத்தை ரீமேக் செய்வார் என்று தெரிகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.