இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட இருக்கும் படங்களின் தேர்வு நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான அமோல் பாலேக்கர் தலைமையிலான குழு இதற்கான படங்களை தேர்வு செய்து வருகிறது.
தென் இந்தியாவில் இருந்து பாகுபலி, காக்கா முட்டை ஆகிய படங்களை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதுபோல் அமீர்கானின் பிகே, பிரியாங்கா சோப்ரா நடித்த மேரி ஹோம், நீராஜின் மாஸான் உள்பட பல்வேறு மொழிகளில் மொத்தம் 45 இந்திய படங்கள் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.
தமிழில் காக்கா முட்டை படம் மட்டுமே தேர்வு ஆகி இருக்கிறது. படம் வெளிவரும் முன்பே 2 தேசிய விருதுகள் பெற்ற இந்தம படம் 2 சிறுவர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக சொல்லும். இந்த படத்தை இயக்கியவர் மணிகண்டன்.