செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஸ்ரீதேவி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள்ஸ்ரீதேவி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள்

ஸ்ரீதேவி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள்ஸ்ரீதேவி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள்

1 minutes read

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் பிரமாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த வெற்றியை பார்த்து வியந்துபோன ஸ்ரீதேவி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஸ்ரீதேவி தற்போது பிரமாண்டமான புலி படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமாண்ட காட்சியமைப்புகளை பார்த்து வியந்த ரசிகர்கள் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் உள்ளனர்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரம் முதலில் ஸ்ரீதேவி நடிப்பதாகத்தான் இருந்தது.

சம்பளம் அதிகமாக கேட்டதால் இந்த படத்தில் ஸ்ரீதேவி நடிக்காமல் ரம்யா கிருஷ்ணன் நடித்ததாக கூறப்படுகிறது.

இப்போது படத்தின் பிரமாண்ட வெற்றியை பார்த்து படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவி நடிக்க ஆசைப்படுவதாக இயக்குனர் ராஜமெளலியிடம் கூறி இருந்தாராம்.

இந்த நிலையில் பாகுபலி–2 படப்பிடிப்பு ஏற்கனவே 30 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த கட்ட பணிகள் நடந்த வருகின்றன. எனவே முதல் பாகத்தில் நடித்தவர்களே 2–வது பாகத்திலும் நடிக்கிறார்கள் என்று ஸ்ரீதேவியிடம் ராஜமவுலி தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஸ்ரீதேவிக்கு ‘பாகுபலி–2’ல் வாய்ப்பு இல்லை. அவரது ஆசை நிறைவேறவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.