செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாரா படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றனநயன்தாரா படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றன

நயன்தாரா படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றனநயன்தாரா படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றன

1 minutes read

நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். புது நடிகைகள் பலர் வந்தாலும் நயன்தாரா நடித்தால் அந்த படத்துக்கு தனி மவுசு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றன. நயன்தாராவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘மாயா’.

இந்த படம் கடந்த 17–ந்தேதி ரிலீஸ் ஆனது. ‘மாயா’ வெளியான 4 நாட்களில் ரூ.13 கோடி வசூல் ஆகி இருப்பதாக இதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதுபோல் ஜெயம்ரவியுடன் நயன்தாரா நடித்துள்ள ‘தனி ஒருவன்’ படம் இதுவரை ரூ. 75 கோடியை குவித்து இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதாக திரையரங்குகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடி தான்’ படம் வெளியாக இருக்கிறது. குஷ்பு மார்க்கெட் உச்ச கட்டத்தில் இருந்த போது அவர் அதிகமாக பேசப்பட்டார். அவரைப் பற்றிய பாடல்களும் வசனங்களும் திரைப்படங்களில் இடம் பெற்றன. அதுபோல இப்போது வரும் படங்களில் நயன்தாரா பற்றிய வசனங்கள், பாடல்கள் வருகின்றன. அவருடைய பெயரில் படமும் வந்திருக்கிறது.

நயன்தாராவின் படங்கள் வசூலிலும் சாதனை படைத்து வருவதால் அவருடைய ‘மார்க்கெட்’ தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.