செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாரா-ஆரி நடிப்பில் வெளிவந்த மாயா இரண்டாம் பாகம் தயாராகிறதுநயன்தாரா-ஆரி நடிப்பில் வெளிவந்த மாயா இரண்டாம் பாகம் தயாராகிறது

நயன்தாரா-ஆரி நடிப்பில் வெளிவந்த மாயா இரண்டாம் பாகம் தயாராகிறதுநயன்தாரா-ஆரி நடிப்பில் வெளிவந்த மாயா இரண்டாம் பாகம் தயாராகிறது

1 minutes read

நயன்தாரா-ஆரி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திகில் படம் ‘மாயா’. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஸ்வின் சரவணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக இயக்குனர் அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மாயா’ படத்தின் வெற்றி எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் என்னை முழுமையாக நம்பி இந்த படத்தை தயாரித்தார்.

‘மாயா’ படம் எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி முடித்தேன். இந்த வெற்றிக்குப் பிறகு ‘மாயா–2’ம் பாகத்தை இப்படி எடுக்கலாம், அப்படி எடுக்கலாம் என்று என்னிடம் புதுப்புது கதைகளை கூறி வருகிறார்கள். அவற்றை கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் ‘மாயா–2’ படத்தை எடுப்பேன்’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.