செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள்- அமிதாப் பச்சன்பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள் – அமிதாப் பச்சன்

பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள்- அமிதாப் பச்சன்பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள் – அமிதாப் பச்சன்

1 minutes read

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு மாதம் தலா, 50 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து, தனக்கு தர உள்ள பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள் என்று அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1994ம் ஆண்டு முதல் சிறந்த கலைஞர்களுக்கு யாஷ் பாரதி சம்மான் என்ற விருது வழங்கப்பட்டு வந்தது. சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இல்லாத போது இந்த விருது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த விருதை மீண்டும் வழங்க திட்டமிட்டுள்ள உ.பி, அரசு, இதற்கு முன் விருதுபெற்று, ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வாழ்நாள் பென்ஷனாக மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்க அமைச்சரவை கூடி முடிவு செய்தது.

உ.பி., அரசின் மிக உயரிய கவுரவ விருதான இவ்விருது 1994ம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு வழங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு இவர்களின் மகனான அபிஷேக் பச்சனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதனால் நலிவடைந்த விருதாளர்கள் பட்டியலில் இவர்கள் 3 பேரி்ன் பெரும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ள 50 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையை வாங்க அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். இது குறித்து முதல்-மந்திரி அகிலேஷ் யாதவிற்கு அமிதாப் பச்சன் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், “எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் யாஷ் பாரதி விருது வழங்கி உத்தரபிரதேச அரசு கௌரவித்ததை மதிக்கிறேன். விருது பெற்றுக் கொண்ட அனைவருக்கும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் என்னுடைய குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ள முழுத்தொகையையும், கஷ்டப்படும் ஏழைகளுக்கும், நம்பிக்கைக்குரிய அறக்கட்டளையின் திட்டங்களுக்கும் செலவிடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.