1
இந்த வருடம் தீபாவளி தினத்தன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சன் டிவியில் தனி ஒருவன், காஞ்சனா 2 ஆகிய படங்களும் ஜெயா டிவியில் என்னை அறிந்தால் மற்றும் ஐ போன்ற படங்களும் விஜய் டிவியில் மாரியும் தீபாவளி அன்று ஒளிபரப்பப்பட உள்ளன. இதில் விஜய் டிவி மட்டுமே தீபாவளி அன்று மாரி படம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.