செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விவேக்கின் மகன் உடல் இன்று தகனம்விவேக்கின் மகன் உடல் இன்று தகனம்

விவேக்கின் மகன் உடல் இன்று தகனம்விவேக்கின் மகன் உடல் இன்று தகனம்

1 minutes read

நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் மர்மக் காய்ச்சலால் இறந்தார்.
நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வனி என்ற 2 மகள்களும், பிரசன்னகுமார் (14) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், பிரசன்னகுமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், அவர் சென்னை வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாள்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மூளைத்தண்டுவட செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சுயநினைவை இழந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். பிற உறுப்புகளும் செயலிழந்த நிலையில், அவர் வியாழக்கிழமை மாலை 4.25 மணிக்கு இறந்தார்.
மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் வீட்டுக்கு மாலை 6 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, திரையுலப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். பிரசன்னகுமாரின் இறுதிச் சடங்கு விருகம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.