தீபாவளியையொட்டி, தனுஷ் ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவற்றில் சில…
மழை எனக்கு மிகவும் பிடிக்கும். மழை பற்றிய பல சூப்பரான நினைவுகள் எனக்குள் இருக்கிறது. எனக்கு விருப்பமான நிறம் கருப்பு.
நான் நடித்து வரும் ‘தங்கமகன்’ படத்தின் டிரைலர் இந்தமாத கடைசியில் வெளியாகும். இதில் என்னுடன் நடித்துள்ள சமந்தாவுக்கு நல்ல கதாபாத்திரம். மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். இதில் நடித்துள்ள மற்றொருவர் எமிஜாக்சன் அவர் மிகவும் பொறுப்புள்ள நடிகை.
இவ்வாறு தனுஷ் கூறினார்.
அஜித் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்ட போது, வழக்கம் போல், ‘‘தெறிக்க விடுங்கள். அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்’’ என்றார்.
தல படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தால்? என்ற கேள்விக்கு, ‘‘வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாடுவேன்’’ என்று பதில் அளித்தார். இதுபோல் விஜய் படத்தில் பாடுவீர்களா? என்ற கேள்விக்கும் ‘‘பாட காத்திருக்கிறேன்’’ என்றார்.
தெலுங்கு படத்தில் நேரடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். நடிப்பை தவிர பாடகரா, பாடல் ஆசிரியரா என்று கேட்டால் பாடல் ஆசிரியர் என்பதுதான் சரி.
இவ்வாறு தனுஷ் பதில் அளித்தார்.