விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதில், சமந்தா விஜய்க்கு மனைவியாக நடிக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில், விஜய் இரண்டு பாடல்கள் பாடவுள்ளார். இதில் ஒரு பாடலை பாடிவிட்டார். மற்றொரு பாடலை கூடிய விரைவில் பாடவுள்ளார்.
இந்நிலையில், விஜய்-சமந்தா-நைனிகா இவர்கள் மூவருக்குமான ஒரு பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடவுள்ளாராம்.