நடிகர் எஸ்.வி.சேகர் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு அடிப்படையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையில், எஸ்.வி.சேகர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
‘எனக்கு செல்போன் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் ஏராளமான மிரட்டல் தகவல்கள் வருகின்றன. என்னுடைய இறப்பு தேதியை நிர்ணயித்துவிட்டதாகவும் மிரட்டுகிறார்கள். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்’ என்று கூறினார்.