நயன்தாராவும், திரிஷாவும் 2 வருடங்களுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்து வந்தார்கள். இருவரும் ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது, தோழிகள் ஆனார்கள். இரண்டு பேருமே தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகிகளாக இருந்து
வருகிறார்கள்.
நயன்தாரா தொடர்ந்து 3 வெற்றி படங்களில் நடித்து, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக உயர்ந்து இருக்கிறார். திரிஷா, ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் அதிரடி கதாநாயகியாக மாறியிருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
இருவரும் முதன் முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இந்த படத்தை டைரக்டு செய்ய, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.