செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்து நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்து நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்து நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்து நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்

0 minutes read

இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறி வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் நடிக்க இருப்பதும் தெலுங்கு படம்தான்.

பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான தில் ராஜு சமீபத்தில் நடந்த விழாவின் போது, தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை நான் தயாரிப்பதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புலி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இசையமைப்பாளராக வெற்றி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாகவும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.