‘காதல்’ படம் மூலம் புகழ் பெற்ற சந்தியாவை, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் திருமணத்தை சென்னைக்கு பதில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்தலாம் என சந்தியாவின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் பேசி முடிவு எடுத்தனர்.
அதன்படிநேற்று காலை குருவாயூர் கோவிலில் சந்தியா- வெங்கட் சந்திரசேகரன் திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தனது திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை சென்னை மழை நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக சந்தியா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் பருவநிலை காரணமாகத்தான் கல்யாணத்தை எளிமையாக கேரளாவிலேயே முடித்துவிட்டோம். வரவேற்பு நிகழ்ச்சி கூட சென்னையில் நடத்தப்போவதில்லை. மேலும் பிரம்மாண்டமாக சென்னையில் கல்யாணத்தை மேற்கொண்டிருந்தால் அதற்காக ஆகியிருக்கும் செலவை, சென்னை மழை நிவாரண நிதிக்கு கொடுப்பது என என் பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார்.