தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்க மகன்’. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் தனுஷ்-சமந்தா காட்சிகள் அதிகம் பேசப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இதே ஜோடி வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்க இருக்கிறது. இந்நிலையில், மேலும் ஒரு புதிய படத்திலும் தனுஷ்-சமந்தா இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக இந்த படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தா தற்போது விஜய்யுடன் இணைந்து ‘தெறி’ படத்திலும், சூர்யாவுடன் இணைந்து ‘24’ படத்திலும் மகேஷ்பாபுவுடன் ‘பிரம்மோற்சவம்’ படத்திலும் நடித்து வருகிறார்.