தமிழ் திரைப்பட ஹீரோக்களில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. ‘நானும் ரவுடிதான்’ பட வெற்றிக்குப்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘மெல்லிசை’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘இறைவி’, சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படங்களில் நடித்து வந்தார்.
அதை தொடர்ந்து நலன்குமாரசாமி இயக்கத்தில் ‘காதலும் கடந்து போகும்’, அருண்குமார் இயக்கும் ‘சேதுபதி’ படங்களில் நடிக்கிறார். இப்போது சீனு ராமசாமியின் மற்றொரு படமான ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தனுஷ் தயாரிக்கும் புதிய படத்துக்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வாடீல் பட இயக்குனர் சிவஞானம் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இவை தவிர மேலும் ஒரு படத்துக்கும் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதையும் சேர்த்தால் விஜய் சேதுபதி கையில் 9 படங்கள் உள்ளன.
இதில் ‘இடம் பொருள் ஏவல்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. ‘மெல்லிசை’, ‘இறைவி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘சேதுபதி’ படங்கள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன. ‘தர்மதுரை’ படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். மற்ற படங்களையும் குறிப்பிட்ட நாளில் முடித்துக் கொடுக்க விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார்.