செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமலுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார்கமலுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார்

கமலுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார்கமலுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார்

1 minutes read

கமல்ஹாசன் உலக அளவில் அறியப்படும் சிறந்த நடிகராக இருக்கிறார். உலக நாயகன் என்று புகழப்படும் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் குறுகிய காலத்திலேயே இந்திய பட உலகின் முக்கிய நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனை கடந்த சில வருடங்களாகவே அப்பா கமலுடன் படத்தில் இணைந்து நடிப்பீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர், அப்பா மிகப் பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

வீட்டில் இருக்கும் போது அப்பாவுடன் நடிப்பு ஒத்திகை பார்த்திருக்கிறேன். நடனம் கூட இணைந்து ஆடி இருக்கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அந்த சந்தர்ப்பம் அமைந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார். இப்போது அந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

கமல் நடிக்கும் புதிய படத்தை மலையாள டைரக்டர் ராஜீவ்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். இதில் கமல் மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.