இருவருக்கும் இந்த ஆண்டின் இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர்.
வேத பண்டிதர்களின் ஆசிர்வாதத்திற்குப் பின் கோயிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுடன் நயன்தாரா ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்.
