பாண்டியன் ஸ்டோர் நாயகி நிஜத்திலும் கர்ப்பமாகி உள்ளர்.

சீரியலில் கர்ப்பமாக நடித்து வரும் நடிகை தற்போது நிஜத்திலும் கர்ப்பமாகி உள்ளதால் அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

தற்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் இந்த சீரியலில் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் இந்த தொடரை தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் தெரிந்ததே

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டு இருந்தாலும் விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் கர்ப்பமாக இருந்த நடிகை ஹேமா தற்போது நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார்.

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கர்ப்பமாக இருப்பது குறித்த விதமாக விதவிதமான புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ஆசிரியர்