கொரோனாவில் இருந்து மீண்ட விஷால்!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷாலும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி அவர்களும் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அடிப்படையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகியோர் முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சையை எடுத்துக் கொண்டதாகவும் அதில் கொடுக்கப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் தற்போது அவர்கள் இருவரும் கொரோனாவால் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ்த் திரையுலகில் ஏற்கனவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது விஷாலும் அவரது தந்தையும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்