Thursday, August 13, 2020

இதையும் படிங்க

மிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா?

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...

நடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு...

ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? | செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சவால் விட்ட மகேஷ் பாபு | செய்து காட்டிய விஜய்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார். மகேஷ் பாபு - விஜய்சமூக வலைதளங்களின்...

பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்

பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. 'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான...

திரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனாவுக்கு பலியானார்

தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.

ஆசிரியர்

பின்னணிப் பாடகி சித்ரா பிறந்த நாள் ஸ்பெஷல் | என்றும் இனிக்கும் இசைக்குயில்

இந்திய சினிமாவில் எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக சில நடிகைகள் பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னணியில் நின்று கோலோச்சுவதுபோல் சில பாடகிகளும் நீண்ட நெடுங்காலம் தம் குரல் வளத்தையும் திறமையையும் தக்கவைத்துப் பல தடைகளைக் கடந்து பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்துகிறார்கள். அப்படிப்பட்ட அரிதான சாதனைப் பாடகிகளில் ஒருவரான சித்ரா இன்று (ஜூலை 27) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா முறைப்படி கர்னாடக சங்கீதம் பயின்றவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றவர். மத்திய அரசு தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமைசாலிகளுக்கு வழங்கிய கல்வி உதவித்தொகையை 1978 முதல் 1984 வரை பெற்றவர்.

1979-ல் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் சித்ராவின் குரலை தனது படங்களிலும் தனி இசைப் பாடல்களிலும் பயன்படுத்தினார். 1980களின் தொடக்க ஆண்டுகளில் வெளியான ‘அட்டஹாசம்’, ஸ்னேஹபூர்வம் மீரா’, ‘ஞான் ஏகனானு’ போன்ற படங்களில் சித்ராவின் முதல் பாடல்கள் அமைந்தன. அதே நேரம் கே.ஜே.யேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களுடன் இசை நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார் சித்ரா.

1985-ல் ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் அசல் மலையாள வடிவம் 1984-ல் வெளியாகியிருந்தது. ஜெர்ரி அமல்தேவ் இசையில் அந்தப் படத்தில் சித்ரா பாடிய பாடல்களால் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா அவரை தமிழுக்கு அழைத்துவந்தார். ஆனால் தமிழில் சித்ரா குரலில் இளையராஜா இசையில் பதிவுசெய்யப்பட்டது ‘நீதானா அந்தக் குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடல்தான். அதே நேரம் அந்தப் படமும் பாடல்களும் வெளியாவதற்கு ஒரு ஆண்டு முன்பாகவே ‘பூவே பூச்சூடவா’ படம் வெளியாகி அதில் சித்ரா பாடிய ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. அந்தப் பாடலே சித்ராவின் அடையாளமாகி ‘சின்னக்குயில்’ என்ற முன்னொட்டு அவருடைய பெயருடன் இணைந்துகொண்டது. சித்ராவின் குரல் குயில்போல் இருப்பதாலும் அவர் குரலுக்கு வயதாவதேயில்லை என்பதாலும் இன்றுவரை தமிழ் ரசிகர்கள் ‘சின்னக்குயில்’ சித்ரா என்றே அவரை அன்புடன் அழைக்கிறார்கள்.

1980-களில் தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டிருந்த பாடகியான ஜென்சியும் மலையாள மண்ணிலிருந்து வந்தவர்தான். அவரைத் தொடர்ந்து சித்ராவும் கேரளத்திலிருந்து வந்து தமிழில் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார். டி.எம்.எஸ்-பி.சுசீலா, எஸ்.பி,பாலசுப்பிரமணியம்-எஸ்.ஜானகி வரிசையில் மனோ-சித்ராவும் தமிழ் சினிமாவின் மிக அதிக எண்ணிக்கையில் மறக்கமுடியாத வெற்றிப் பாடல்களைப் பாடிய பாடகர் இணையாக நிலைபெற்றார்கள்

தமிழில் சித்ரா பாடிய முதல் பாடலின் முதல் சொல் ‘சின்னக்குயில்’ என்றிருப்பதாலும் சித்ராவின் குரல் குயில்போல் இருப்பதாலும் அவர் குரலுக்கு வயதாவதேயில்லை என்பதாலும் இன்றுவரை தமிழ் ரசிகர்கள் ‘சின்னக்குயில்’ சித்ரா என்றே அவரை அன்புடன் அழைக்கிறார்கள்.

இளையராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு அவருடைய இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடிய சித்ரா, ராஜாவுக்கு அடுத்த இசை மேதையான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிக அதிக பாடல்களைப் பாடிய பாடகி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். ரஹ்மான் இசையில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் 115-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இது தவிர ரஹ்மான் இசையமைத்த தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தாய்மொழியான மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் முன்னணிப் பாடகியாக கடந்த 35 வருடங்களாகத் திகழ்கிறார் சித்ரா. இவை தவிர வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனப் பல்வேறு இந்திய மொழிப் படங்களிலும் தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். மொத்தமாக 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் சித்ரா. இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடும் அளவு குரல் வளத்துடனும் உத்வேகத்துடனும் இருக்கிறார்.

சித்ராவின் முதல் தேசிய விருது தமிழ்ப் படம் மூலமாகத்தான் கிடைத்தது 1985-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இசைக் காவியமான ‘சிந்து பைரவி’ படத்தில் ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘நானொரு சிந்து’ ஆகிய பாடல்களைப் பாடியதற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார் சித்ரா. இது தவிர ‘மின்சார கனவு’ படத்தில் ‘மானா மதுர மாமரக் கிளையிலே’ பாடலுக்காகவும் ‘ஆட்டோகிராப்’ படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார் சித்ரா. இதுவரை மொத்தம் ஆறு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் சித்ரா. இந்தியாவில் மிக அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்குரியவர். அவற்றில் சரிபாதி தமிழிலிருந்துதான் என்பதும் தமிழ் இசை ரசிகர்களின் பெருமிதத்துக்குரிய விஷயம்தான்.

இவை தவிர எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 36 மாநில அரசு விருதுகள், எண்ணற்ற சர்வதேச அங்கீகாரங்கள் சித்ராவின் சாதனை மகுடத்தை அலங்கரிக்கின்றன. இந்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். வயது மூப்பால் ஓய்வு பெற்றுவிட்ட இசைக் கலைஞர்கள் பாடகர்களின் மருத்துவம் மற்றும் இதர முக்கிய செலவுகளுக்கு நிதி திரட்டுவதற்காக கேரளத்தைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார். இசைத் துறையில் தனது முன்னோடிகளான எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோரை கெளரவப்படுத்தும் வகையில் சிறப்பு இசை ஆல்பங்களை வெளியிட்டார்

இந்திய சினிமாவில் ஒரு பெண் கலைஞராக மிக அரிதான சாதனைகளை நிகழ்த்தி இன்றளவும் வெற்றிகரமாகத் திகழ்ந்துவரும் பாடகியான சித்ரா மென்மேலும் புதிய உயரங்களை அடைய வேண்டும் இசை ரசிகர்களை என்றென்றும் மகிழ்விக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

 

நன்றி : எஸ்.கோபாலகிருஷ்ணன் | இந்து தமிழ் திசை

இதையும் படிங்க

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

‘தப்பட்’ திரைப்பட விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...

சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? | அமிதாப் வேதனை

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...

தொடர்புச் செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

அவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். 

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

உருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை

உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...

‘தப்பட்’ திரைப்பட விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...

அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை

த்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...

துயர் பகிர்வு