பா.ஜ.கவில் இணையவிருப்பது பொய் | விஷால்

நடிகர் விஷால், தமிழக பா.ஜ.க தலைவர் முருகனை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதால் அவர் விரைவில் பா.ஜ.வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இதையடுத்து அரசியலிலும் கால் பதிப்பதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டார்.

அதன்படி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார் விஷால். ஆனால் அவரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து விஷால் போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது பரபரப்பானது.

நடிகர் விஷால், தமிழக பா.ஜ.க தலைவர் முருகனை வரும், 14, 15 ஆம் தேதிகளில், சந்திக்க அனுமதி கேட்டுள்ளார்.

விஷால் சந்திப்பு, வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன், கட்சியில் இணைவதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியானது.

கங்கனா ரனாவத்திற்கு, விஷால் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அவர், பா.ஜ.க. வில் சேரவாய்ப்பு உள்ளது.

அதனால் தான், முருகனை சந்திக்க விஷால் அனுமதி கேட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஷால், தான் பாஜகவில் இணையஇருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனத் தெரிவித்தார்.

– சினிமா சஞ்சிகை தொகுப்பு –

ஆசிரியர்