Sunday, May 9, 2021

இதையும் படிங்க

அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்!

சுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய சங்கர்

முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக...

டக்கு முக்கு டிக்கு தாளம்

தங்கர் பச்சான் இயக்கத்தில் விஜித் பச்சான், மிலனா நாகராஜ், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் முன்னோட்டம்.கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது...

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்...

நடிக்கும் எண்ணம் இதுவரைக்கும் இல்லை…!

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த...

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது 31வது படத்தின் படப்பிடிப்பை பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில்...

ஆசிரியர்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 02, 1960

பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை

இறப்பு: செப்டம்பர் 23, 1996

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

திரைப்பட வாழ்க்கை

திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார். அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது. கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் ‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.

வெற்றிப் பயணம்

‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.

அவரின் சில குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள் ஓய்வதில்லை’ (தமிழ் 1981),  ‘சீதகொக சிலுக’ (தெலுங்கு 1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982), ‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ் 1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982), ‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின் மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ் 1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும் கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ் 1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983), ‘பிரதிக்னா’ (மலையாளம் 1983), ‘தங்கமகன்’ (தமிழ் 1983), ‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத் ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி தோஸ்த்’ (இந்தி 1983), ‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983), ‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க் சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர் ஒன்’ (தெலுங்கு 1983), ‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983), ‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984), ‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள் கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ் 1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984), ‘ஓட்டயம்’ (மலையாளம் 1985), ‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ போராட்டம்’ (தெலுங்கு 1985), ‘லயனம்’ (மலையாளம் 1989), ‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக் பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே 7PM’ (மலையாளம் 1990),  ‘ஆதித்யா 369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு கேட்குதம்மா’ (தமிழ் 1991), ‘இதயம்’ (தமிழ் 1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி மேஷ்ற்று’ (கன்னடம் 1992), ‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ் பாபு’ (தமிழ் 1993), ‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே வெளியே’ (தமிழ் 1993), ‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி 1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994), ‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ (தமிழ் 1996).

இறப்பு

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

நன்றி : itstamil.com

இதையும் படிங்க

தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க...

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் பிரபலம் மற்றும் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சித்தப்பா இரும்பு மனிதர் என்று பதிவு செய்திருக்கிறார்.நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி...

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்!

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

ஆர்யா மீதான திருமண மோசடி வழக்கு | மேலாளரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூ.70.5 லட்சம் வரை பண மோசடி செய்ததாக, நடிகர் ஆர்யாவுக்கு எதிராகக்கொடுக்கப்பட்ட புகார் மீதான...

நடிகை கங்கனாவிற்கு கொரோனா தொற்று!

தமிழ்  சினிமாவில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கொரொனா தொற்றுக்குள்ளாகி வருகின்றமை அவதானிக்கூடியதாகவுள்ளது.  பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவரே நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மென்மையான மற்றும் மிருதுவான கைகள் வேண்டுமா

சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும்...

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

துயர் பகிர்வு