Sunday, October 24, 2021

இதையும் படிங்க

கே.பி. சார் இல்லாதது வருத்தம் | ரஜினிகாந்த்

தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்!

94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும்...

அவார்டுகளை அள்ளிக்குவிக்கும் யோகிபாபு

சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகிபாபு, பல அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு தற்பொழுதே விருது கிடைத்துள்ளது.

பிரபாஸ் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். நடிகர் பிரபாஸின் பிறந்த நாளான இன்று,...

அவரை தடுக்க முடியாது… அஜித் புகழும் போனி கபூர்!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும்...

வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு,...

ஆசிரியர்

மூத்த நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்பயணம்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்.

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 

‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 

இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். 

சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் ‘மேஜர் சந்திரகாந்த்’ உள்ளிட்ட ஏராளமான மேடை நாடகங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். இவர் ‘குடும்பம்’ என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்திருக்கிறார். 

81 வயதாகும் நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு மகள் ஒருவர் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் வசித்துவருகிறார். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் நேற்று காலமானார்.

இவருக்கு திரை உலகின் மூத்த நடிகர்களான சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்தார்.

இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார்.

ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார்.

இவர் கதை நாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.

ஸ்ரீகாந்த்தின் தந்தை பெயர் ராஜாவெங்கட்ராமன். 1940.03.19 அன்று தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் கதாநாயகனாக நடித்த படங்கள் 50.

சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களான வெண்ணிற ஆடை (1965), நாணல் (1965), ராஜபார்ட் ரங்கதுரை (1973), அன்புத்தங்கை (1974), திக்கற்ற பார்வதி, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், வைரம் (1974), வெள்ளிக்கிழமை விரதம், ராஜநாகம், ஞான ஒளியில், வசந்தமாளிகை, அவள், காசேதான் கடவுளடா, காசியாத்திரை, அவன் ஒரு சரித்திரம், அன்னப்பறவை, சட்டம் என் கையில், நீயா?, தங்கப்பதக்கம் (1975), பைரவி (1978), நூற்றுக்கு நூறு, காதல் கொண்டேன் (2003) போன்றவையாகும்.

ஸ்ரீகாந்த் நடித்த வேடங்களில் மறக்கமுடியாதது தங்கப்பதக்கம் “ஜெகன்” கதாபாத்திரம்.

தந்தையான நேர்மை நிறைந்த பொலிஸ் அதிகாரி எஸ்.பி.சௌத்ரியான சிவாஜிகணேசன் அவர்கள் தன் மகனை மிஸ்டர் ஜெகன் என்றே பல காட்சிகளில் அழைப்பார். மகனும் தன் தந்தையை தனக்கு எதிரியாக பாவித்த பிறகு தனது தந்தையை எஸ்.பி.சௌத்ரி என்றே அழைப்பார்.

தமிழ்த் திரையுலகில் மகனானவன் தனது தந்தையையே எதிரியாக பாவித்து வளர்பவனாக இந்தப் படத்தில்தான் முதன்முதலாக நாம் கண்டிருக்க முடியும்.

ஜெகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஸ்ரீகாந்தின் நடிப்பானது படம் பார்க்கும் இரசிகர்களையே அந்தக் கதாபாத்திரத்தின் மீதே கோபம் கொள்ளும் அளவிற்கு மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

சிவாஜியும், ஸ்ரீகாந்த்தும் இணைந்த காட்சிகள் அனைத்தும் இப்பொழுது பார்த்தாலும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும். சிவாஜிக்கும் ஸ்ரீகாந்துக்கும் சம பலத்தோடு வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் வசனம் காட்சியின் பலத்தை பல மடங்கு கூட்டியிருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு இவர் நாயகனாக நடித்து வெளிவந்த “ராஜநாகம்” திரைப்படம் பலருடைய பாராட்டுப் பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இப்படத்தில் இவர் ஏற்ற ”கிருஷ்ணமூர்த்தி” பாத்திரம் அருமை. ஸ்ரீகாந்த் அறிமுகமான வெண்ணிற ஆடை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றார்.

வெண்ணிற ஆடை படத்தில் தான் ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா,வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் தமிழில் அறிமுகமானார்கள்.

இப்படத்தில் “கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல”என்ற பாடலில் ஜெயலலிதாவின் நடனத்திற்கு ஸ்ரீகாந்த் நடக்கும் ஸ்டைல் அருமை.

இவருடைய பின்புறத்தில் கெமரா இருக்கும், இவருக்கு முன்பு ஜெயலலிதா நடனமாடியபடி செல்வார். பிரமாதமான பாடல் காட்சியது.

ஒவ்வொரு ஃபிலிமிலும் இரசனை உணர்ச்சி தழும்பி நிற்கும். ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் “நாவலைப் படித்து விட்டு படத்தையும் பார்த்தால், அப்படியே நாவலில் படித்த உணர்வை இவருடைய நடிப்பில் உணரமுடியும்.

நாவலின் கதாபாத்திரத்தை கனகச்சிதமா நம் கண்முன்னே நடமாட விட்டிருப்பார் ஸ்ரீகாந்த்.

மிகவும் யதார்த்தமான, இயல்பான நடிப்பு இவருடையது. பைரவி திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தாலும் ரஜினி பெயருக்கு முன்பாக இவருடைய பெயர்தான் டைட்டில் கார்டில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு இவர் அன்றைக்கு புகழோடு இருந்தார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், கவிஞர் வாலி, சோ, நாகேஷ், போன்றோர் இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,கர்மவீரர் காமராஜர் போன்றோர் மீது ஸ்ரீகாந்த் அளவு கடந்த பற்று கொண்டவர்.

மக்கள் திலகம் எம்ஜியாருடன் ஸ்ரீகாந்த் இறுதி வரை ஒரு படத்திலேனும் நடிக்கவில்லை. எனினும் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது.

இலங்கையில் தயாரித்த “நெஞ்சுக்கு நீதி” படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ளார். அனைவரிடமும் இயல்பாக பழகக்கூடியவர் ஸ்ரீகாந்த்.

12.10.2021 அன்று சென்னையில் தனது 81ஆவது அகவையில் காலமானார். தமிழ் என்றும் மறக்க முடியாத ஓர் பன்முகம் கலைஞர் திரு ஸ்ரீகாந்த்.

எஸ்.கணேசன் ஆச்சாரி 

சதீஷ் கம்பளை இலங்கை

இதையும் படிங்க

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

இசையமைப்பாளர் இனியவன் மரணம் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு...

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம்...

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை!

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக...

பாரதி கண்ணம்மாவில் இனி வெண்பாவாக நடிக்கப் போவது குக்வித் கோமாளி பிரபலம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பிரிந்து வாழும் கணவன்...

இலங்கையின் முன்னணி சிங்கள நடிகை காலமானார்

இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார். இறக்கும் போது அவருக்கு 64 வயது. உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு...

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

தொடர்புச் செய்திகள்

தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாரதி கண்ணம்மாவில் இனி வெண்பாவாக நடிக்கப் போவது குக்வித் கோமாளி பிரபலம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பிரிந்து வாழும் கணவன்...

இலங்கையின் முன்னணி சிங்கள நடிகை காலமானார்

இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார். இறக்கும் போது அவருக்கு 64 வயது. உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு...

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

மேலும் பதிவுகள்

கடவுள் மறைத்து வைத்த உலகம் | துவாரகன்

கொள்ளைக்காரரின் கண்களிலிருந்துகடவுள்அந்த உலகத்தைமறைத்து வைத்திருந்தார். அது குழந்தைகளின் உலகம். அங்கேபறவைகளின் சங்கீதம் இருந்ததுகாற்றுக் கரங்களின்அரவணைப்பு...

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

இசையமைப்பாளர் இனியவன் மரணம் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு...

மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும்...

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

55 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே.இ.தீவுகள் | 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

சூப்பர் 12 சுற்றில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை தோற்கடித்து 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் தனது...

இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞன்

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.  இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில்...

பிந்திய செய்திகள்

தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக!

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ்...

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!

அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச்...

சினம் தவிர்த்தால் சிகரம் தொடலாம்

கோபப்படும் சமயத்தில்தான் அவசரப்பட்டு சிந்திக்காமல் முடிவுகளை எடுத்து அவதிப்படுகிறோம். அதனால் தான் கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

துயர் பகிர்வு