Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ நகைச்சுவை படமல்ல – சந்தானம்

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ நகைச்சுவை படமல்ல – சந்தானம்

1 minutes read

மிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முன்னேறிவரும்  ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ முழு நீள நகைச்சுவை படமல்ல. சீரியஸான, அனைவரும் ரசித்துப் பார்க்கக்கூடிய திரைப்படம் என அப்படத்தின் நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

‘வஞ்சகர் உலகம்’ எனும் படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. 

இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், குரு சோமசுந்தரம், ஈ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தேனீ ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். புலனாய்வு பாணியிலான நகைச்சுவை, த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லேப்ரிந்த் பிலிம்ஸ் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இம்மாதம் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும்  இத்திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More