Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட ‘நூடுல்ஸ்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட ‘நூடுல்ஸ்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்

1 minutes read

நடிகர் ஹரிஷ் உத்தமன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நூடுல்ஸ்’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இதில் ஹரிஷ் உத்தமன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ‘அருவி’ திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து, எஸ். ஜே. ஆழியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி வினோத் ராஜா மற்றும் வேல்ராஜ் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து றொபட் சற்குணம் பின்னணி இசை அமைக்க, பாடல்களுக்கு எம்.கே.ரமேஷ் கிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

ஹோம் இன்வாஸின் த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரக்னா அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். டி. எம். சுருளி ராஜா மற்றும் வசந்த் மாரிமுத்து ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை வி ஸ்கொயர் என்டர்டெய்ன்மெண்ட் எனும் நிறுவனம் வெளியிடுகிறது.

‘நூடுல்ஸ் ‘படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் மோசன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் தம்பதிகளின் இல்லத்திற்குள் அத்துமீறி ஒருவர் உள்ளே நுழைகிறார். அவரை வெளியேற்றுவதற்காக இவர்கள் எம்மாதிரியான முயற்சியினை மேற்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை என தெரிய வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More