Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஃபர்ஹானா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமிய பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இம்மாதம் 26 ஆம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்றிருப்பதால், அவரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஃபர்ஹானா’ திரைப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More