Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

1 minutes read

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மார்டின்’ திரைப்படம் விரைவில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’ ஆகிய படங்களை தொடர்ந்து கன்னட மொழியில் தயாராகும் திரைப்படங்களுக்கு அகில இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கன்னட திரையுலகின் எக்சன் நாயகனான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடித்து வரும் ‘மார்டின்’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகும் என புத்தாண்டு வாழ்த்துடன் வெளியான போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஏ. பி. அர்ஜுன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘மார்டின்’ திரைப்படத்தில் துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார்.

சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தை வாசவி என்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் உதய் கே. மேத்தா தயாரித்திருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More