செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

ரெப் இசை கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வீரன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘மரகத நாணயம்’ பட இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் ‘வீரன்’. இதில் ஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆதிரா ராஜ் நடிக்கிறார். 

இவர்களுடன் குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 

ஃபன்டசி ஜேனரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அவர் நடித்து வரும் ‘வீரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பது போல் இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.